வழுக்கை விழ காரணமான மரபணு கண்டுபிடிப்பு
தலையில் வழுக்கை விழுவதற்கு காரணமான மரபணுவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வழுக்கை தலை உள்ளவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சிலருக்கு இளம் வயதிலேயே தலையில் உள்ள முடி கொட்டி வழுக்கை விழுந்துவிடும்.
மற்றவர்களுக்கு 35 முதல் 40 வயதில் வழுக்கை விழ ஆரம்பிக்கும். இந்த தலையாய பிரச்சினைக்கு காரணம் என்ன என்பது குறித்து உலகம் முழுவதும் ஏராளமான விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். பான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் வழுக்கை விழுவதற்கு காரணமான மரபணு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டொக்டர் காலித் கூறியதாவது, சராசரியாக ஒருவரின் தலையில் இருந்து தினமும் 100 முடிகள் கொட்டினால் எந்த பிரச்சினையும் இல்லை. ஏனென்றால், தினமும் 100 முடிகள் புதிதாக முளைக்கும். ஆனால், கொட்டும் முடிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போதுதான் வழுக்கை விழத் தொடங்குகிறது.
முடி வளர்வதற்கு காரணமான செல்களில் உள்ள மரபணுவில் ஏற்படும் கோளாறே அதிக முடி கொட்டுவதற்கு காரணம் என்று கண்டுபிடித்துள்ளோம் என்றார். வழுக்கை ஏற்படுத்தும் மரபணு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதை சரி செய்வது எப்படி என்பது குறித்து அடுத்தக் கட்ட ஆராய்ச்சி நடக்கத் தொடங்கி உள்ளது. அதில் வெற்றி கிடைத்தால், வழுக்கை தலையர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிடும் என்று இந்த ஆராய்ச்சி குழுவின் தலைவர் ரெஜினா பெட்ஸ் கூறினார்.
No comments:
Post a Comment